உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையோரம் நின்றிருந்தவர் கார் மோதி பலி

சாலையோரம் நின்றிருந்தவர் கார் மோதி பலி

செஞ்சி: சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். செஞ்சி அடுத்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜூலு மகன் சீனிவாசன், 47; இவரும், அதே ஊரை சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன், 45; என்பவரும் நேற்று காலை 10:00 மணியளவில், செஞ்சி திருவண்ணாமலை பிரதான சாலையில், செம்மேடு அரசு நடுநிலைப்பள்ளி எதிரே சாலை ஓரம் நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் சீனிவாசன், வெங்கடேசன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சீனிவாசன் இறந்தார். வெங்கடேசன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !