உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றவர் சாவு

கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றவர் சாவு

திண்டிவனம்; திண்டிவனம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் மனைவி இறந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவரும் இறந்தார்.திருவள்ளூர் மாவட்டம், பாப்பான்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், 45; இவரது மனைவி கல்பனா, 40; இருவரும் கடந்த 6ம் தேதி மயிலம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஸ்கூட்டரில் சென்னைக்கு சென்றனர்.திண்டிவனம் - சென்னை சாலையில் மேல்பாக்கம் வந்த போது, திருச்சி நோக்கிச் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்பனா இறந்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சம்பத்நேற்று காலை இறந்தார்.ஒலக்கூர்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை