மேலும் செய்திகள்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
18-Jul-2025
மயிலம்: மயிலத்தில் தெரு நாயை நாட்டு துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மயிலம், ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் சீனு 60; நரிக்குறவர். இவர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மயிலம் பகுதியில் உள்ள பட்டிக்கொட்டா தெருவில் நடந்து சென்ற நாயை, அவரது நாட்டு துப்பாக்கியால் சுட்டார். அதில், நாய் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. இது குறித்து மயிலம் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சீனுவை கைது செய்து, அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
18-Jul-2025