உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நெஞ்சு வலியால் மெக்கானிக் பலி

 நெஞ்சு வலியால் மெக்கானிக் பலி

விக்கிரவாண்டி: மாரடைப்பால் இறந்த மெக்கானிக் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் ,சீர்காழி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன், 40; மெக்கானிக். இவர் விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஒர்க் ஷாப்பில் சந்திரசேகரன் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சரிந்தார். அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி