காப்பீடு திட்டம் குறித்த கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டங்கள் உள்ளிட்ட வங்கி சலுகைகள் குறித்த கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு திட்டங்கள் உள்ளிட்ட வங்கி சலுகைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இந்த சிறப்பு விளக்க கூட்டத்திற்கு மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.வங்கி பிரதிநிதிகளாக, ஸ்டேட் வங்கி கிளை அலுவலர் கேசவ்ராஜ், இந்தியன் வங்கி அலுவலர் முரளி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர் சந்தோஷ் பங்கேற்று, அரசு ஊழியர்களுக்கான ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்கள், அதன் சேவைகள், பதிவு செயல்முறைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினர்.இந்நிகழ்வில், பல அரசு துறை அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடலும் நடந்தது.