விழுப்புரத்தில் நாளை மெகா வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 5ம் தேதி நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நாளை 5ம் தேதி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடக்கும் முகாமில், 18 முதல் 40 வயது வரையிலான வேலை நாடுனர்கள் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்களும் பங்கேற்கலாம்.முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 20,000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.