உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளர் நல வாரியத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம்

தொழிலாளர் நல வாரியத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.முகாமிற்கு, மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் சிவா, புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றிய கவுன்சிலர் பரிதா சும்சுதீன், மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி, ஒன்றிய நிர்வாகிகள் சேகர், ஞானசேகர், பெலாக்குப்பம் ஊராட்சி தலைவர் பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை