உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செஞ்சி; வல்லத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் துவக்கி வைத்தார். மேலாளர் முத்துவேல் முன்னிலை வகித்தார். ஊர்நல அலுவலர் மஞ்சுளா வரவேற்றார்.சமூக நலத்துறை கணினி இயக்குநர் ராஜசேகர் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டார். நல வாரியத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் வங்கிகளில் ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் சுயதொழில் செய்ய மானிய கடன் பெற முடியும். அத்துடன் அரசு வழங்கும் இலவச பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற முடியும்.ஊர்நல அலுவலர் அமுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை