உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனநலம் பாதித்த பெண் கிணற்றில் விழுந்து பலி

மனநலம் பாதித்த பெண் கிணற்றில் விழுந்து பலி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தாயுடன் சென்ற மனநலம் பாதித்த பெண் கிணற்றில் விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த கீழ்பசார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58; இவரது மனைவி ராதாபாய். இவர்களது இரண்டாவது மகள் சந்தானலட்சுமி, 27; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.நேற்று முன்தினம் மாலை, ராதாபாய், சந்தானலட்சுமி ஆகிய இருவரும் ஏரிக்கரையோரம் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கிருஷ்ணமூர்த்தி ஏரிக்கரை பக்கமாக தேடிச் சென்றார். அப்போது, அங்குள்ள கிணற்றின் கல்லை பிடித்தபடி ராதாபாய் உயிருக்கு போராடியது தெரியவந்தது.தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் ராதாபாயை மீட்டனர். கிணற்றில் இறங்கி தேடியபோது சந்தானலட்சுமி நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. தாயும், மகளும் தற்கொலை செய்து கொள்வதற்காக விழுந்தார்களா அல்லது தவறி விழுந்தார்களா என்பது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ