மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனநல காப்பகத்தில் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம், புதிய பஸ் நிலையம் அருகே, சுதாகர் நகரில் தனியார் மனநல காப்பகம் செயல்படுகிறது. இங்கு மனநலம் பாதித்த சுனிதா,49; என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தார். நேற்று காப்பாளர் விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள் மளிகை கடைக்கு செல்ல புதிய பஸ் நிலையம் சென்றனர். சுனிதாவும், அவர்களோடு சென்றார். புதிய பஸ் நிலையம் வந்த சுனிதா திடீரென மாயமானார். ஊழியர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக உரிமையாளர் சுஜாதா விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.