உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பலாப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

பலாப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பலாப்பழம் ஏற்றிச் சென்ற மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரம் ராஜேந்திரன் மகன் பிரகாஷ், 25; டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, மினி லோடு வேனில் பலாப்பழங்களை ஏற்றிக்கொண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கோயம்பேட்டிற்கு சென்றார். பேரங்கியூர் அருகே வேன் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் டிரைவர் பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை