மேலும் செய்திகள்
முருகன் கோவிலில் சூரிய ஒளி வழிபாடு
28-Mar-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோவிலில் சூரியன் சிவனை வழிபாடும் அதிசய நிகழ்வையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, நேற்று காலை 5.45 மணிக்கு வினாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சத்தியாம்பிகை, பனங்காட்டீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6.22 மணிக்கு மூலவர் பனங்காட்டீஸ்வர் மீது சூரியன் ஒளிபட்டது. பின்னர் அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் சிரசின் மீது சூரிய ஒளிவிழுந்தது. சூரியன் ஒளி விழுந்த பிறகு சிறப்பு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டு தோறும் சித்திரை முதல் நாளில் இருந்து 7ம் தேதி வரை சுவாமி மீது சூரிய ஒளி பட்டு சூரியன் வழிபடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.கோவில் அபிஷேம் மற்றும் பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் செய்திருந்தனர். சிவபெருமானை சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வை சுற்றியுள்ள கிராம மக்கள் கண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை தர்மகர்த்தாக்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
28-Mar-2025