மேலும் செய்திகள்
டாரஸ் லாரி மோதி விபத்து; சூப் கடை உரிமையாளர் பலி
02-Mar-2025
மயிலம் : மயிலம் அருகே முயல் வேட்டையின்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் விரல் துண்டானது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் அஜித்குமார், 25; நரிக்குறவர். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன், தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார்.துப்பாக்கியின் 'டிரிகர்' பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல், வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. உடன், அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இது குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Mar-2025