மேலும் செய்திகள்
கோனியம்மன் திருக்கோவில் தேர்த் திருவிழா
04-Mar-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி உட்பட 3 பள்ளிகளை தரம் உயர்த்திட வேண்டும் என அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் அவர் பேசியதாவது:தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரணை, கஞ்சனுார், ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளி,விக்கிரவாண்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாகவும், கோழிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி தர வேண்டும்.கடந்த பெஞ்சல் புயலின் போது 35 ஏரிகளின் கரைகள், மதகுகள் உடைந்து வெள்ள நீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஏரிகளை நீர்வளத்துறை அமைச்சர் பரிசீலனை செய்து சீரமைத்து தர வேண்டும்.தொகுதியில் 119 கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை ஊரக வளர்ச்சித்துறை சீரமைக்க வேண்டும். கல்பட்டு, திருவாமாத்துார், ஆகிய இடங்களுக்கு புதியதாக ஆரம்ப சுகாதார நிலையமும், வேம்பி ஆரம்ப சுகாதார நிலையத்தை 30படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
04-Mar-2025