உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு

அரசு கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.இக்கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து சக்கரபாணி எம்.எல்.ஏ., கல்லுாரியில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மாணவர் சேர்க்கை குறித்தும், கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா எனவும் கல்லுாரி முதல்வர் வில்லியமிடம் கேட்டறிந்தார்.பின், கல்லுாரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு கைப்பந்து, கோ-கோ, பேட் மிட்டன் போன்றவைகளை விளையாட தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அறிவுறுத்தினார்.மேலும், விளையாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளித்தார்.கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் அரங்க பண்பில்நாதன் மற்றும் பேராசிரியர்கள், அ.தி.மு.க., பாசறை செயலாளர் சுமன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அண்ணாதுரை உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ