மேலும் செய்திகள்
வாக்காளர்களாக சேர ஓட்டுச்சாவடிகளில் முகாம்
23-Dec-2025
செஞ்சி: தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று விடுபட்டவர்களை கண்டறிந்து சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மஸ்தான் எம்.எல்.ஏ., அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இம்மாதம் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ம் தேதிகளில் நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்ட சபை தொகுதியில் உள்ள அந்தந்த பகுதி நிர்வாகிகள் வரைவு வாக்காளர் பட்டியலுடன் வீடு, வீடாக சென்று சரிபார்க்க வேண்டும். அதில் விடுபட்டவர்களின் பெயர்களை கண்டறிந்து அதற்கான படிவங்களை முகாம்களில் கொடுத்து ஒருவர் பெயரும் விடுபடாமல் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
23-Dec-2025