உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வானுார்: வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட கிளியனூர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கிளியனுார், கீழ்கூத்தப்பாக்கம், ஆதனப்பட்டு ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு நடந்த இந்த முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் உஷா முரளி, பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஊரக வளர்ச்சிதுறை, தீயணைப்புதுறை, தமிழ்நாடு மின்சார வாரியம், போலீஸ் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மக்களுக்கு விண்ணப்பம் எழுதி தர தன்னார்வலர்கள் பணியில் இருந்தனர்.நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், பிடிஓ.,க்கள் மணிவண்ணன், சுபாஷ்சந்திரபோஸ், வானுார் தாசில்தார் வித்யாதரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர்கள் பிரேமா குப்புசாமி, கவுதம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் புஷ்பராஜ், ராஜூ, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தனபால்ராஜ், சிவக்குமார், வேலு, புஷ்பராஜ், பாபு, சித்ரா வீரப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கநாதன், முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.