தாயனுாரில் நலத்திட்ட உதவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சி: தாயனுார் ஊராட்சியில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மேல்மலையனுார் ஒன்றியம் தாயனுாரில் ஊராட்சி தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் ஏற்பாட்டில், கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் லாவண்யா ராஜேஷ் குமார் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலா நாராயணமூர்த்தி, யசோதரை சந்திரகுப்தன், ஜெயலட்சுமி தக்ஷிணாமூர்த்தி, விஜயகுமார் துணை தலைவர் கீதா முனியன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், சம்பத் ஹரிதாஸ், ரகுராமன் இளை ஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர்கள் மணியரசன், சக்திவாசன்,தாஸ், கிளை நிர்வாகிகள் சீதாராமன், செல்வம், சிவா, தாஸ், ராமச்சந்திரன் முருகன், சேகர், ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர். பிரியா சதீஷ் நன்றி கூறினார்.