உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்

செஞ்சி: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.செஞ்சி அடுத்த சவுட்டூர் கிராமத்தில் பழங்குடியினர் குடியிருப்பில் நேற்று முன்தினம் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் துரைசெல்வன் முன்னிலை வகித்தார்.மஸ்தான் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு, அரிசி, காய்கறி, நிவாரணத்தொகை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் புவனா செந்தில் குமரன், சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சத்யா, வி.ஏ.ஓ., மணிகண்டன், தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் வாசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி