மேலும் செய்திகள்
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
10-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தீ விபத்தால் பாதித்த குடும்பத்தினருக்கு, எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.கோலியனுார் அடுத்த தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு மனைவி கவிதா. இவரின் கூரை வீடு, நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.தகவலறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் சென்று தீ விபத்தால் பாதித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரிசி, 5,000 ரூபாய் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.தாசில்தார் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் ராபர்ட், வி.ஏ.ஓ., நந்தகுமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகவேல், மாவட்ட விவசாய அணி கேசவன், ஊராட்சி தலைவர் பாரதி தட்சணாமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
10-Sep-2024