மேலும் செய்திகள்
2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
15-Oct-2024
விழுப்புரம், மயிலம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எம்.எல்.ஏ., சிவக்குமார், துணை முதல்வரிடம் மனு அளித்தார்.விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில் நேற்று மாலை நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார்,. அவரிடம், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் அளித்த மனு:மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். மயிலம் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்க வேண்டும்.ரெட்டணை, பெரியதச்சூரில் தீயணைப்பு நிலையம், வல்லத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைத்திட வேண்டும். நெடி மொழியனுார், தென்ஆலப்பாக்கம் ஊராட்சிகளை பிரித்து நெடி, கொரளூர் என புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். பேரணி, நெடிமொழியனுார் ரயில் பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைத்திட வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
15-Oct-2024