உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை

மகனிடம் பிரச்னை தாய் தற்கொலை

வானுார்: மகனிடம் ஏற்பட்ட பிரச்னையில், தாய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வானுார் அடுத்த காசிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திரவேல் மனைவி சித்ரா, 35; இவருக்கு சசிக்குமார், தயாநிதி எனும் இரு மகன்களும், கோவர்தினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் கணவர் உத்திரவேல் இறந்து விட்டார்.இந்நிலையில், சித்ராவிற்கும் மூத்த மகன் சசிக்குமாருக்கும் இடையே, கடந்த 15ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த சித்ரா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ