மகள் மாயம் தாய் புகார்
கோட்டக்குப்பம்: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகள் பவித்ரா, 28; பி.காம்., பட்டதாரி. புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இது குறித்து அவரது தாய் வள்ளி அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.