உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊழியரை காலில் விழ வைத்தவர்களை கைது செய்ய எம்.பி., கோரிக்கை

ஊழியரை காலில் விழ வைத்தவர்களை கைது செய்ய எம்.பி., கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது: திண்டிவனத்தில் பட்டியலின இளநிலை உதவியாளர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரத்தில், குற்றம் சாற்றப்பட்டவர்களை கைது செய்யவில்லை. அவர்களை கைது செய்யக் கோரி, திண்டி வனத்தில் (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. நகராட்சிகளில் தொடர்ச்சியாக பட்டியல் சமூகத்திற்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்பு களில் காட்டப்படும் சாதி ய பாகுபாடுகளை களைய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் துணை தலைவர் பதவியை பட்டியலின சமூகத்திற்கு வழங்க உரிய சட்ட திருத்தத்தை தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி.,யில் மத்திய அரசு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால், செஸ் வரிவிதிப்பை வைத்து கொண்டு, ஜி.எஸ்.டி.,யை குறைத்து விட்டோம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ