நுாறு நாள் வேலை கூடுதலாக ஒதுக்க அரசுத்துறை செயலரிடம் எம்.பி., மனு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக நுாறு நாள் வேலை ஒதுக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையின் செயலாளர் ககன் தீப் சிங் பேடியை சந்தித்து அளித்துள்ள மனு: விழுப்புரம் மாவட்டத்திற்கு, கடந்தாண்டு நுாறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மனித சக்தி நாட்கள் 1.79 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டு 81 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலமற்ற விவசாய கூலிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதல் மனித சக்தி நாட்கள் ஒதுக்க வேண்டும். மேலும் திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வி.சி.கட்சியின் சட்டசபை குழு தலைவர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.