உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

வானுார்: எறையூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.வானுார் அடுத்த எறையூரில் பூரணி, பொற்கலை அய்யனாரப்பன், பொறையாத்தம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களுக்கு திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிேஷக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, கடந்த 14ம் தேதி மாலை 4;00 மணிக்கு கணபதி ஹோமமும், லட்சுமி ஹோமமும், விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை 5;00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வியும் நடந்தது.நேற்று காலை 7;00 மணிக்கு, கோ பூஜையும், இரண்டாம் கால யாக வேள்வியும், விசேஷ சாந்தியும் நடந்தது. காலை 9;00 மணிக்கு அய்யனாரப்பன் கோவிலுக்கும், 9;30 மணிக்கு பொறையாத்தம்மன் கோவிலுக்கும் கும்பாபிேஷக விழா நடந்தது.10;00 மணிக்கு முத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் முதன்மை சார்பு நீதிபதி வரலட்சுமி, எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை