மேலும் செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்
30-Sep-2025
இரும்பு கேட் விழுந்து ஊழியர் படுகாயம்
11-Oct-2025
வானுார்: தனியார் கம்பெனி ஊழியர் மர்மமான முறையி ல் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, பட்டாபிராம், சூரஞ்சேரி அண்ணா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருபாகரன், 35; இவர் வானுார் அருகே ராவுத்தன்குப்பத்தை சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டில் வசித்து வந்தார். சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் வானுாரில் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் கடந்த, 3 மாதமாக வாடகை க்கு இருந்து வந்தார். அவரது மனைவிக்கு, 3 நாட்களுக்கு முன் மொபைல் போனில் தொடர்பு கொண்ட கிருபாகரன், தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் உரிமையாளர் வந்து பார்க்கும் போது கிருபாகரன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வானுார் போலீசார் வழக்கு பதிந்து, ஊழியர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Sep-2025
11-Oct-2025