உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய பயிர் காப்பீடு திட்டம் ரூ.51 கோடி இழப்பீடு தொகை

தேசிய பயிர் காப்பீடு திட்டம் ரூ.51 கோடி இழப்பீடு தொகை

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், பயிர் காப்பீடு திட்டத்தின்படி விவசாயிகளுக்கு 51 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை மூலம், கடந்த 2024-25 ஆண்டிற்கு 67 ஆயிரத்து 643 ஏக்கர், பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 28 ஆயிரத்து 362 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இவர்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக 51 கோடியே 72 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2023-24 ஆண்டிற்கு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 794 ஏக்கர், பயிர் காப்பீடு செய்யப்பட்டது. இதில், 52 ஆயிரத்து 608 விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர். இவர்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி