உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய பெண் குழந்தை விருது; விண்ணப்பங்கள் வரேவேற்பு

தேசிய பெண் குழந்தை விருது; விண்ணப்பங்கள் வரேவேற்பு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயதிற்குமேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களை தடுக்க பாடுபட்டு, வீர, தீர செயல் புரிந்த 13 வயதிற்குமேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன., 24) தேசிய பெண் குழந்தை விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு ஒரு லட்சத்திற்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். விருதுக்கு தகுதியுடையவர் தமிழகத்தை பிறப்பிடமாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் வரும் நவ., 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ