அரசு கல்லுாரியில் என்.சி.சி., துவக்க விழா
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) அமைப்பு துவக்க விழா நடந்தது. கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரியான தமிழ்நாடு 6வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் சக்கரவர்த்தி என்.சி.சி., அமைப்பை தொடக்கி வைத்து பேசினார். விழாவில் என்.சி.சி., மாணவியர் பயிற்சியாளர் ஸ்ரீதேவசேனா, அரசு பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ஞானமூர்த்தி, என்.சி.சி., நிர்வாக அலுவலர் நாராயணன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.