மேலும் செய்திகள்
புதிய பள்ளி கட்டடம் திறப்பு விழா
03-Oct-2025
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தில் 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்தி வேல், மத்திய ஒன்றிய செயலாளர் கைரா சடகோபன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தீபா சிவகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் வரவேற்றனர். விழாவில் சி.மெய்யூர் கிராமத்தில் 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு தொடக்கப்பள்ளி கட்டடங்கள், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றை பொன்முடி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த 119 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., முல்லை மற்றும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
03-Oct-2025