விழுப்புரம் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி., நியமனம்
விழுப்புரம் : விழுப்புரம் போலீஸ் சரக டி.ஐ.ஜி.,யாக உமா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டி.ஐ.ஜி., எஸ்.பி., தகுதியிலான போலீஸ் உயரதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக உள்ள திஷாமித்தல், சென்னை மேற்கு மண்டல போலீஸ் பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக உள்ள உமா இடம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.