உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

மரக்காணம்: மரக்காணத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் கலெக்டர் திவ்யன்சு நிகாம் தலைமை தாங்கினார். சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், தாசில்தார் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், பேரூராட்சி செயல் அலுவலர் ஜேம்ஸ், வேளாண் துறை உதவி இயக்குனர் சரவணன், மின்வாரியம், மருத்துவம் , கால்நடை, தீயணைப்பு, நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் காவல் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சப் கலெக்டர் கேட்டறிந்தார்.மேலும், பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொக்லைன் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி