உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மைப் பணி முகாம்

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மைப் பணி முகாம்

செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் மூலிகை தோட்டம் மற்றும் மருத்துவமனை முகப்பு பகுதியில் துாய்மைப் பணி முகாம் நடந்தது. அரசு மருத்துவமனையில் நடந்த முகாமை மருத்துவ அலுவலர் பாலகோபால் துவக்கி வைத்தார். சித்த மருத்துவ அலுவலர் அஜித்தா ரமேஷ்பாபு, தலைமை ஆசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார். இதில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். செவிலியர் பொறுப்பு கண்காணிப்பாளர் ஆதிலட்சுமி ஆசிரியர்கள் செந்தில்குமார், அசோக் துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ