மேலும் செய்திகள்
தாய் திட்டியதால் மகள் மாயம்
02-Jan-2025
விழுப்புரம்: நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகள் தாரணிஸ்வரி,19; இவர், விழுப்புரம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகின்றார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Jan-2025