மேலும் செய்திகள்
ஆட்சிமொழி சட்ட வார நிகழ்வுகள் துவக்கம்
19-Dec-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை ஆட்சிமொழி சட்ட வாரமாக கொண்டாடப்பட உள்ளது.கலெக்டர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை 7 நாட்கள் ஆட்சிமொழி சட்ட வாரமாக கொண்டாடப்பட உள்ளது. இன்று, 18ம் தேதி வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்பலகை அமைத்திட வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டமும், 19ம் தேதி கல்லுாரி மாணவர்களின் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.20ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆட்சிமொழி சட்டவார விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, நான்குமுனை சந்திப்பில் முடிகிறது.தொடர்ந்து, 23, 24, 26ம் தேதிகளில் அரசு பணியாளர்களுக்கான ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கை, மொழி பயிற்சி, மொழி பெயர்ப்பு, கலை சொல்லாக்கம், கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.ஆட்சி மாழி சட்ட வாரத்தின் இறுதி நாளான 27ம் தேதி, பொதுமக்கள் ஆட்சிமொழி சட்டத்தை அறியும் வகையில், ஒன்றியம், தாலுகா என மாவட்டத்தின் பிற பகுதிகளில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசு பணியாளர்கள், தமிழ் அமைப்புகள் இணைந்து ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
19-Dec-2024