உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

வானுார்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயரிழந்தார். புதுச்சேரி, முல்லை நகர் சோழன் வீதியை சேர்ந்தவர் தர்மசிவன், 77; இவர் கடந்த அக்., 22ம் தேதி புதுச்சேரியில் இருந்து சொந்த ஊரான கிளியனுார் அடுத்த மொளசூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஒழிந்தியாப்பட்டு சந்திப்பு அருகில் சென்ற போது, பின்னால், வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் பலத்த காயமடைந்தவரை கிளியனுார் போலீசார் மற்றும் பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை