உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

வானுார்: வானுார் அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்தார். வானுார் அடுத்த ரங்கநாதபுரம் பூத்தோட்டம் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வள்ளி, 65; இவர் கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்தபோது, பாம்பு கடித்துள்ளது. அதில் மயக்கமடைந்து, பாதிக்கப்பட்ட அவரை, உறவினர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !