மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 'குண்டாஸ்'
16-Oct-2024
திண்டிவனம்: குறைந்த விலையில் தங்கம் வாங்கித்தருவதாக கூறி, சென்னையை சேர்ந்தவரிடம் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்தவர் ஹிதேஷ்பிஷா, 44; தனியார் கல்லுாரி நிர்வாக உதவியாளர். இவருக்கு பேஸ்புக் மூலம் ராஜராஜன், 32; என்பவர் அறிமுகமானார்.ராஜராஜன் தனக்கு கஸ்டம்ஸ் ஆபீசில் நன்கு பழக்கம் உள்ளதாகவும், தங்க பிஸ்கெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பிய ஹிதேஷ்பிஷா கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி 35 லட்சம் ரூபாயுடன் காரில் வந்தார். திண்டிவனம் புறவழிச் சாலையில் நின்றிருந்த ராஜராஜனை காரில் ஏற்றிக்கொண்டு சென்றார்.தீவனுார் கூட்டேரிப்பட்டு ரோட்டில், காரில் வந்த கும்பல், போலீஸ் எனக்கூறி, காருடன் வந்த ஹிதேஷ்பிஷாவை கடத்தி, 35 லட்சம் ரூபாய், அவர் அணிந்திருந்த 2 சவரன் செயின், மொபைல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். புகாரின் பேரில், ரோஷனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.புதுச்சேரி, காட்டேரிகுப்பம் பாலமுருகன் மகன் சந்துரு, 22; ரமேஷ் மகன் உட்பட மூவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரி சந்தைபுதுக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காந்தி மகன் கோகுல், 23; என்பவரை ரோஷணை போலீசார் நேற்று மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் கைது செய்தனர்.
16-Oct-2024