உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபட் மீது பைக் மோதி ஒருவர் பலி

மொபட் மீது பைக் மோதி ஒருவர் பலி

அவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.அவலுார்பேட்டை அடுத்த சுந்தரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பன், 55; இவரது மனைவி மணியம்மாள். நேற்று முன்தினம் மாலை 6:50 மணிக்கு இருவரும் டி.வி.எஸ்., எக்செல் மொபட்டில் அவலுார்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது குந்தலம்பட்டு ஏரி அருகே வந்த போது, சேத்பட் சாலையிலிருந்து பின்னால் வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக், மொபட்டின் மீது மோதியது. இதில் வேம்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மணியம்மாள், 50; திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி