உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூடுதலாக 26 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ஏற்பு

கூடுதலாக 26 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ஏற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கூடுதலாக 26 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கடந்த 10ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருவம்பட்டு, தேவதானம்பேட்டை, பூண்டி, பி.கரைமேடு, சுந்தரிபாளையம், குமுளம், புதுக்கருவாட்சி, சிந்தாமணி, கயத்துார், பொன்னங்குப்பம், பிரம்மதேசம், சத்தியமங்கலம், எய்யில், மேல்வயலாமூர், தாழங்குணம், கெங்கபுரம், பரனுார், நெடுந்தோண்டி, கட்டளை, தீவனுார், எண்ணாயிரம், ஈச்சங்குப்பம், எளமங்கலம், கொட்டியாம்பூண்டி, பொன்னம்பூண்டி, குறிஞ்சிப்பை, வெள்ளிமேடுபேட்டை, உலகலாம்பூண்டி, ஆனாங்கூர், கிளியனுார் ஆகிய 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல் அறுவடை அதிகரித்து வருவதால், கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மாவட்டத்தில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை அமைத்திட, கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் வி.மாத்துார், எசாலம், வாக்கூர், மேட்டுவைலாமூர், எதப்பட்டு, ஓங்கூர், சிறுவாடி, அரகண்டநல்லுார், கண்டாச்சிபுரம், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், அரும்பட்டு, மணக்குப்பம், பெரியசெவலை, புதுக்குப்பம், பொம்பூர், பெரும்பாக்கம், காணை, கல்பட்டு, பா.வில்லியனுார் ஆகிய 20 இடங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய நிறுவனம் சார்பில் கொரலுார், நீர்பெருந்தகரம், ஏதாநெமிலி, வடநெற்குணம், கொல்லுார், நல்லாவூர் ஆகிய 6 இடங்களிலும், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வரும் 20 ம் தேதி முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ