பரமபத வாசல் திறப்பு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் லட்சுமி நாராயணன் சுவாமி கோவிலில் நேற்று காலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை 4 மணி அளவில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்தி வெங்டேச பெருமாள் சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும், தீபாரதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.ஹரி பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.