உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

விழுப்புரம்: விழுப்புரம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால், நேரடி கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது.விழுப்புரம் அடுத்த கல்பட்டு, பெரும்பாக்கம், கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதி விவசாயிகள் சம்பா பருவத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 3 வாரங்களாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யவில்லை. இதனால், காணை, கல்பட்டு, பெரும்பாக்கம் கொள்முதல் நிலையங்களில் 5000 மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், 2000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் தரையில் கொட்டி வைத்திருந்த நெல் ஆகியவை நனைந்து சேதமடைந்தது. மழையில் நனைந்த நெல்லை விவசாயிகள் உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ