உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவு காத்த கிளியாக பணி நிரந்தரத்தை எதிர்நோக்கி காத்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள்

இலவு காத்த கிளியாக பணி நிரந்தரத்தை எதிர்நோக்கி காத்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2012 அ.தி.மு.க., ஆட்சியின்போது, 16,400 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் ரூ.5,000 சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டனர். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், பணி மூப்பு தகுதிகளுடன் தேர்வான அவர்கள், தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர்.இவர்கள் குறிப்பாக, பிற தொழில் திறன்களை கற்றுத்தரும் பணி, ஓவிய ஆசிரியர்கள், கணினிஅறிவியல் ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இசை, தோட்டக்கலை,கட்டடக்கலை, வாழ்வியல்திறன் ஆசிரியர்கள் என பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள், பணி அமர்த்தியதுமுதல் தற்போதுவரை 13 ஆண்டுகளாகவும், சொற்ப ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பணிப்பாதுகாப்பு கருதி, காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்து போராடி வருகின்றனர்.தி.மு.க., இரண்டு முறை தனது தேர்தல் வாக்குறுதியில், பணி நிரந்தரம் உறுதி என சொல்லியதை, முதல்வர் ஸ்டாலின் தனது அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். வரும் ஜன.6ம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.கவர்னர் உரையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி