உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம்; ராமதாஸ் அட்வைஸ்

பட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம்; ராமதாஸ் அட்வைஸ்

திண்டிவனம்: யாராவது நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்தாலும், அவர்களுக்கு நாகரீகமாக பதில் சொல்ல வேண்டும் என கட்சியினருக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.சென்னை சோழிங்கநல்லுரில் பட்டாளி சமூக ஊடக பேரவையின் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் பழைய ஆளாக இல்லை, வயது முதிர்வால் குழந்தை போல் மாறிவிட்டார். கட்சி விதிகளின் படி, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் நிறுனருக்கு இல்லை என்று அடுக்கடுக்காக ராமதாஸ் மீது குற்றம் சுமத்தினார்.இந்த சூழ்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், நேற்று காலை 10 மணியளவில், கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பட்டாளி சமூக ஊடக பேரவையின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில சமூக ஊடக பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன்குமார் வாண்டையார், மாநில தலைவர் ஆனந்தன், மாநில செயலாளர் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்; வருங்காலத்தில் சமூக ஊடக பேரவை சிறப்பாக செயல்பட வேண்டும். மாவட்டம் வாரியாக பொறுப்புகளை மறுசீரமைத்து அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சமூக ஊடக பேரவை செயல்பட வேண்டும். சமூக ஊடக பேரவை கூட்டங்களை மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும். நாகரீகமாகவும், நளினமாகவும், நயமாகவும் சமூக ஊடக பேரவை செயல்பட வேண்டும். இணையதளத்தின் மூலம் பா.ம.க.,வினர் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். யாராவது நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்தாலும், அவர்களுக்கு நாகரீகமாக பதில் சொல்ல வேண்டும் என அறிவுரை வழஙகினார்.சோழிங்கநல்லுார் கூட்டத்தில் ராமதாசை கடுமையாக விமர்சித்த அன்புமணிக்கு, பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய கூட்டத்தில் நிருபர்களிடம் எந்த கருத்தும் கூறாமல் ராமதாஸ் மவுனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி