உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெங்கட்ரமணருக்கு முத்தங்கி அலங்காரம்

வெங்கட்ரமணருக்கு முத்தங்கி அலங்காரம்

செஞ்சி: செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு முத்தங்கி அலங்காரம் செய்தனர். செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணனர் கோவிலில் கடந்த, 2ம் தேதி முதல், 9 நாள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி சேர்மன் ரங்க பூபதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். நேற்று 6ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், முத்தங்கி அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து பாகவதர் மற்றும் ஆண்டாள் கோஷ்டியினர் பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 2:30 மணிக்கு மகா சிறப்பு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் விழா குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் மற்றும் உபயதாரர்கள்,பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை