பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் குகசரவணபவன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். மாவட்ட செயலாளர் விவேகானந்தன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் கோவிந்தராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். நிர்வாகிகள் கண்ணன், மணி, அப்துல் ரஹ்மான் உட்பட பலர் பங் கேற்றனர். கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஜூலை மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.