உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பென்சனர் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பென்சனர் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செஞ்சி; செஞ்சியில் பென்சனர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சி தாசில்தார் அலுவலகம் முன்பு அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்சன், பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தனராஜகோபால் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பொருளாளர் அண்ணாமலை நன்றி கூறினார். வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி