உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் திக்... திக்...

தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் திக்... திக்...

விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ் முனையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரவாண்டி வடக்கு பைபாஸில் விபத்துகளை தவிர்க்க உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள், லாரிகள், வடக்குபைபாஸ் முனை அருகே வந்து,வளைந்து தெற்கு பைபாஸில் செல்கிறது. சென்னை - திருச்சி நான்குவழி சாலைகளில் எந்நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். தெற்கு பைபாஸ் முனையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு வரும் விவசாய டிராக்டர்கள் சாலையை கடக்கும்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இரு புறமும் போக்குவரத்து முடங்கி நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. தெற்கு பைபாஸ் முனை, விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறிவிட்டது. வடக்கு பைபாஸ் முனையில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பதுபோல், தெற்கு பைபாஸ் முனையில் விபத்துகளை தடுக்கவும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ