மேலும் செய்திகள்
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணி
20-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் - வ.பாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணி முடிந்து போட்ட சிமெண்ட் சாலை போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது.விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இருந்து வ.பாளையம் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி மூலம் பாதாள சாக்கடை போடும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து அங்கு சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்த சாலை தற்போது வாகன போக்குவரத்திற்கு லாயகற்ற நிலைக்கு மாறியுள்ளது. வ.பாளையம் பகுதிக்கு செல்லும் சாலையில் 1.5 கி.மீ., வரை ஆங்காங்கே பெயர்ந்துள்ளதால் வாகனங்களில் செல்லும் பெண்கள், பெரியவர்கள் வரை பலரும் அதில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Jan-2025